பக்க்தர்களுக்கு குட் நியூஸ்..! நாள்தோறும் 50,000 பேருக்கு இலவச தரிசனத்திற்கு அனுமதி!

வரும் டிசம்பர் 23- ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்குகிறது. அதற்காக, வரும் ஜனவரி 01- ஆம் தேதி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
நாளொன்றுக்கு 300 ரூபாய் தரிசனம் மூலம் 20,000 பக்தர்களும், இலவச தரிசனம் மூலம் 50,00 பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 50,000 என்ற எண்ணிக்கையில், 10 நாட்களுக்கு 5 லட்சம் இலவச டோக்கன்கள் வழங்கப்படவுள்ளது.
300 ரூபாய் தரிசன டிக்கெட்டை ஆன்லைன் மூலம் பகதர்கள் பெறலாம் எனக் கூறப்படுகிறது. வரும் நவம்பர் 10- ஆம் தேதி முதல் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வெளியாகும் என திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளொன்றுக்கு 22,500 என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கு 2.25 லட்சம் 300 டிக்கெட்டுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.