1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..! அதள பாதாளத்தில் காய்கறி விலை!

1

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் முதல் நவம்பர் வரை மழை பெய்து வந்ததால், புகழ்பெற்ற திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு காய்கறி வரத்து வெகுவாக சரிந்தது. இதனால் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்ததால் பொதுமக்கள் கடும் இன்னலை சந்தித்தனர்.

வழக்கமாக ஒட்டன்சத்திரம் சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 100 முதல் 110 லாரிகளில் தக்காளி வரும் நிலையில், அப்போது 60 முதல் 75 லாரிகள் மட்டுமே வந்தது. மேலும் மழை, பனி என மாறி மாறி வந்ததால் தக்காளி பழங்கள் செடியிலேயே அழுகி விட்டன. மேலும் பூச்சி தாக்குதலால் காய்கறி விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டது.

அப்போது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 600 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. ஒரு கிலோ தக்காளி நூறு முதல் 110 ரூபாய் வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது. மேலும் பீன்ஸ், பீட்ரூட், முருங்கைக்காய் ஆகியவற்றின் விளையும் கடுமையாக அதிகரித்தது. அப்போதைய சூழலில் ஒரு கிலோ பீன்ஸ் 200 ரூபாய்க்கும், அவரைக்காய் 120க்கும், தக்காளி 120 ரூபாய்க்கும், இஞ்சி 110 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 60 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 300 முதல் 400 ரூபாய் வரையும் விற்பனையானது.

இந்த நிலையில் தற்போது மழை பனிப் பொழிவு குறைந்து வெயில் அடித்து வருவதால் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளதால், காய்கறிகள் விலை அதல பாதாளத்தை நோக்கி சென்றுள்ளது. சில காய்கறிகள் வெறும் பத்து ரூபாய்க்குள்ளாகவே விற்பனையாகிறது. தற்போதைய சூழ்நிலை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி வெறும் 3 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ ஏழு ரூபாய்க்கும், பீட்ரூட் 4 ரூபாய்க்கும், சுரக்காய் இரண்டு ரூபாய்க்கும், கத்தரிக்காய் 7 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதேபோல பல காய்கறிகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 

Trending News

Latest News

You May Like