1. Home
  2. தமிழ்நாடு

தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்..! அரசு விடுதி மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்வு...!

1

தமிழகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்காக விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் கல்லுாரி மாணவர்களுக்கு தலா ரூ.1,100, பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் உணவு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிதியை வைத்து தான், விடுதி காப்பாளர்கள் மாணவர்களுக்கான உணவுப் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், அரசுப் பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை 1000 ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், அரசு கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like