1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! இனி 1 லட்சம் ரூபாய் முன்பணம் பெறலாம்..!

1

தமிழக அரசு கல்வித்துறையில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும், அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்யவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

இது மாணவர்களின் பசியைப் போக்கி, கற்றல் திறனை மேம்படுத்த உதவுகிறது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்காக நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச சீருடை, மடிக்கணினி, காலணிகள், புத்தகப்பை, கணித உபகரணப்பெட்டி, வண்ணப் பென்சில்கள் மற்றும் கிரையான்கள் வழங்கப்படுகின்றன. 

இந்த நிலையில் அரசுப் பணியாளர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்கல்வி பயில்வதற்கு ஏற்கனவே வழங்கி வந்த 50 ஆயிரத்தில் இருந்து ஒரு இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் பயில 25 ஆயிரம் ரூபாயிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை கூட்ட தொடரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவை விதி எண் 110-ன் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 9 அறிவிப்புகளை வெளியிட்டார். இதனை செயல்படுத்தும் விதமாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வி முன்பணம் உயர்வால் அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில பெரும் உதவியாக அமைந்துள்ளது. 

Trending News

Latest News

You May Like