1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற வாய்ப்பு..!

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற வாய்ப்பு..!


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் ஆல்-பாஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மாணவர்கள் அனைவருக்கும் ஆல்-பாஸ் செய்யப்பட்டு, மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து மீண்டும் நேரடி வகுப்புகள் ஆரம்பம் ஆனது. இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை உறுதிபட கூறியிருந்தது.

இந்நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மீண்டும் மாணவர்கள் அனைவருக்கும் ஆல்-பாஸ் செய்திட பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கொரோனா பாதிப்பு மட்டுமின்றி ஓமைக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருவதை அடுத்தே பள்ளிக்கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

அதே நேரத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

இருப்பினும், பொதுத்தேர்வு நடைபெறும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உள்ள கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு நிலவரத்தைப் பொறுத்தே பொதுத் தேர்வு நடைபெறும் என்றும், இல்லாவிட்டால் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like