1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்களுக்கு குட் நியூஸ்..! தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!

1

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து ஏப்ரல் மாதத்திலேயே கோடை விடுமுறை வழங்கப்படும். மற்ற வகுப்பு மாணவர்களுக்குமே 1ம் தேதி முதல் தான் கோடை விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இந்த முறை லோக்சபா தேர்தலால் முன்கூட்டியே 1 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது. அதேபோல் ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜுன் 1ம் தேதி அல்லது ஜுன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

ஆனால் இந்த முறை லோக்சபா தேர்தல் முடிவு ஜுன் 4ம் தேதி வெளியானது. இதனால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. அதன்பிறகு அதிகப்படியான வெப்பஅலை உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் பள்ளி திறப்பு என்பது தள்ளிப்போனது. அதாவது கோடை விடுமுறை முடிந்து ஜுன் 10ம் தேதி தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

இதையடுத்து விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் 210 நாட்கள் பள்ளிகள் இயங்கும். ஆனால் இந்த முறை கூடுதலாக 10 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் 20 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தான் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று பல்வேறு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற பள்ளிக்கல்வித்துறை நாளை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி உள்ளது.இதனால் தமிழகத்தில் நாளை பள்ளிகள் செயல்படாது.

Trending News

Latest News

You May Like