1. Home
  2. தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..! கூடுதலாக 10 நாள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு..!

1

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புமாணவர்களுக்கான முழு ஆண்டுமற்றும் 3-ம் பருவத் தேர்வுகளை ஏப். 12-ம் தேதிக்குள் நடத்தி13-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும்’ என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது.இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, 4 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10, 12-ம் தேதிகளில் நடக்க இருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் ஏப்ரல் 22, 23-ம் தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டன.

எனினும், 1 முதல் 3-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி முதல்கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேநேரம், 4 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்கள் ஏப்ரல் 12-ம் தேதிவரை பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர், தேர்தல் பணிகாரணமாக ஏப்ரல் 15 முதல்21-ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. தேர்தல் முடிந்ததும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி தேர்வுகள் கடந்த 22, 23-ம் தேதிகளில் நடத்தி முடிக்கப்பட்டன.

தேர்வுகள் நேற்றுடன் முடிந்தநிலையில், மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. எனினும், ஆசிரியர்கள் அனைவரும் இறுதி வேலை நாளான ஏப்ரல் 26 வரை பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றுபின்னர் அறிவிக்கப்படும். ஏனென்றால், மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாக உள்ளது. மேலும், இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்நிலையில் கோடை வெயில் மற்றும் தேர்தல் முடிவுகள் காரணமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளை திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில், ஜூன் 10ஆம் தேதிக்கு பின் பள்ளிகளைத் திறக்கலாமா (10 நாள் கூடுதல் விடுமுறை) என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளார். முதலில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையும், 2ஆம் கட்டமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையும் பள்ளிகளைத் திறக்கலாமா எனவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like