1. Home
  2. தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..! ஏப்ரல் 13ந் தேதி முதல் கோடை விடுமுறை!

1

சென்னை, தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கு 12ம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் (மார்ச் 22ம் தேதி) தேர்வு முடிகிறது. இதனையடுத்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில், 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு முன்கூட்டியே ஏப்.2 முதல் 12ம் தேதி வரை ஆண்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்.2 முதல் 12 வரை ஆண்டுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

குறிப்பாக ஏப்ரல் 2ம் தேதி மொழித் தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 3ம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கான ஆண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல ஏப்ரல் 5ம் தேதி கணிதப் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. 

தொடர்ந்து 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10ம் தேதி அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 12ம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில், ஏப்ரல் 8ம் தேதி சிறுபான்மையின மாணவர்களுக்கான மொழிப்பாடத் தேர்வு நடைபெறுகிறது.

அதேபோல 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்.2 முதல் 12ம் தேதி வரை ஆண்டுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. குறிப்பாக ஏப்ரல் 2ம் தேதி மொழித் தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 3ம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கான ஆண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல ஏப்ரல் 4ம் தேதி உடற்கல்வி பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது.

தொடர்ந்து மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி கணிதத்துக்கும், ஏப்ரல் 8ம் தேதி விருப்பப் பாடத்துக்கும் தேர்வு நடைபெறுகிறது. ஏப்ரல் 10ம் தேதி அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 12ம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 13ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Trending News

Latest News

You May Like