பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..! நாளை முதல் தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை ஆரம்பம்..!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற்று முடிந்திருக்கிறது.ள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் கோடை விடுமுறையானது அறிவிக்கப்பட்டது. ரம்ஜான் பண்டிகை காரணமாக நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது
மக்களவைத் தேர்தல் மற்றும் பண்டிகை விடுமுறையை அடுத்து நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இன்றுடன் தேர்வுகள் முடிவடைவதால் நாளை முதல் கோடை விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜூன், 3 அல்லது 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேநேரம், தனியார் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகக் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு வெயில் மிகவும் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பில் காலதாமதம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே நிலவி வருகிறது.
பொதுவாக கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் ஒன்றாம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் இந்த முறை கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தாலும் ஜூன் முதல் வாரத்தில், அதாவது ஜூன் 4-ம் தேதி எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அதிலும் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள் என்பதால் முதல் வாரம் வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த வருடம் சுமார் இரண்டு மாதங்கள் கோடை விடுமுறை மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.