பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..! தமிழ்நாட்டில் கோடை விடுமுறை எப்போது தெரியுமா ?

1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுக்கான தேர்வுகள் குறித்து அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 1 ஆம் வகுப்பு 5 ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையில் நடத்தப்படும். இதே போன்று தான் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் இறுதி தேர்வு நடத்தப்படும். இதையடுத்து ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும். இதன் பின்னர், ஜூன் 2-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு அட்டவணை முழு விவரம்:
தேர்வு நாள், தேதி | ஒன்றாம் வகுப்பு | இரண்டாம் வகுப்பு | மூன்றாம் வகுப்பு | நான்காம் வகுப்பு | ஐந்தாம் வகுப்பு |
தேர்வு நேரம் (காலை 10 -நண்பகல் 12 மணி) | காலை 10 -நண்பகல் 12 மணி | காலை 10 -நண்பகல் 12 மணி | பிற்பகல் 2 -மாலை 4 மணி | பிற்பகல் 2 -மாலை 4 மணி | |
9-04-2025 (புதன்கிழமை) | - | - | - | தமிழ் | தமிழ் |
11-04-2025 (வெள்ளிக்கிழமை) | - | - | - | ஆங்கிலம் | ஆங்கிவம் |
15-04-2025 (செவ்வாய்க்கிழமை) | தமிழ் | தமிழ் | தமிழ் | கணிதம் | கணிதம் |
16-04-2025 (புதன்கிழமை) | விருப்ப மொழிப் பாடத் தேர்வு | விருப்ப மொழிப் பாடத் தேர்வு | விருப்ப மொழிப் பாடத் தேர்வு | விருப்ப மொழிப் பாடத் தேர்வு | விருப்ப மொழிப் பாடத் தேர்வு |
17-04-2025 (வியாழக்கிழமை) | ஆங்கிலம் | ஆங்கிலம் | ஆங்கிலம் | அறிவியல் | அறிவியல் |
21-04-2026 (திங்கள்கிழமை) | கணிதம் | கணிதம் | கணிதம் | சமூக அறிவியல் | சமூக அறிவியல் |
தேர்வு நாள், தேதி | ஆறாம் வகுப்பு | ஏழாம் வகுப்பு | எட்டாம் வகுப்பு | எட்டாம் வகுப்பு | ஒன்பதாம் வகுப்பு | ஒன்பதாம் வகுப்பு |
தேர்வு நேரம் (காலை 10 - நண்பகல் 12:30) | காலை 10- நண்பகல் 12:30 | காலை 10- நண்பகல் 12:30 | பிற்பகவ் 2- மாலை 4:30 | காலை 10- நண்பகல் 12:30 | பிற்பகவ் 2- மாலை 4:30 | |
08-04-2025 (செவ்வாய்க்கிழமை) | தமிழ் | தமிழ் | - | தமிழ் | - | தமிழ் |
09-06-2025 (புதன்கிழமை) | ஆங்கிலம் | ஆங்கிலம் | - | ஆங்கிலம் | - | ஆங்கிலம் |
16-04-2025(புதன்கிழமை) | கணிதம் | கணிதம் | - | கணிதம் | - | கணிதம் |
17-04-2025 (வியாழக்கிழமை) | விருப்ப மொழிப் பாடத் தேர்வு | விருப்ப மொழிப் பாடத் தேர்வு | - | விருப்ப மொழிப் பாடத் தேர்வு | - | விருப்ப மொழிப் பாடத் தேர்வு |
21-04-2025 (திங்கள்கிழமை) | அறிவியல் | அறிவியல் | - | அறிவியல் | - | அறிவியல் |
22-04-2025 (செவ்வாய்க்கிழமை) | உடற்கல்வி | உடற்கல்வி | - | உடற்கல்வி | - | உடற்கல்வி |
23-04-2025(புதன்கிழமை) | சமூக அறிவியல் | சமூக அறிவியல் | - | - | - | - |
24-04-2025(வியாழக்கிழமை) | சமூக அறிவியல் | சமூக அறிவியல் |