1. Home
  2. தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..! அரையாண்டு விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா ?

1

வழக்கமாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும். இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை திருத்தப்பட்ட நாட்காட்டியின் படி அரையாண்டு தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்திருந்தது. இதை அடுத்து அரையாண்டு தேர்வுக்காக மாணவர்கள் தங்களை தயார் செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஒருபுறம் மாணவர்களும் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் டிசம்பர் 21ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு அரையாண்டு தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி முடிவடைகிறது.

 

தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்குகிறது. இதில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையும், ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு விடுமுறை அடங்கும். மொத்தம் 9 நாட்கள் அரையாண்டு தேர்வு முடிந்து ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அன்று முதல் மூன்றாம் பருவம் தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அந்த நாளிலேயே மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

 

தேர்வு அட்டவணை 10ஆம் வகுப்பு

10.12.2024 - செவ்வாய் - தமிழ்

11.12.2024 - புதன் - விருப்ப மொழி பாடம்

12.12.2024 - வியாழன் - ஆங்கிலம்

16.12.2024 - திங்கள் - கணிதம்

19.12.2024 - வியாழன் - அறிவியல்

23.12.2024 - திங்கள் - சமூக அறிவியல்

தேர்வு அட்டவணை 12ஆம் வகுப்பு

09.12.2024 - திங்கள் - தமிழ்

10.12.2024 - செவ்வாய் - ஆங்கிலம்

12.12.2024 - வியாழன் - கணினிஅறிவியல், கணினிபயன்பாடு, உயிர்வேதியியல், அரசியல் அறிவியல்,புள்ளியியல்

14.12.2024 - சனி - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்

17.12.2024 - செவ்வாய் - கணிதம், விலங்கியல், வணிகம், ஊட்டச்சத்து மற்றும் நீரிழிவு

20.12.2024 - வெள்ளி - வேதியியல், கணக்கியல், புவியியல்

23.12.2024 - திங்கள் - இயற்பியல், பொருளாதாரம்

Trending News

Latest News

You May Like