1. Home
  2. தமிழ்நாடு

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..! டெபாசிட் தொகைகளுக்கான வட்டி விகிதம் உயர்வு..!

1

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தற்போது ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் டெபாசிட் தொகைகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அதிகபட்சம் ரூ. 2 கோடி வரையான டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் உயர்ந்துள்ளது.

இந்த புதிய மாற்றம் மே 15ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 46-179 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 5.5%, 180 முதல் 210 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 6% வட்டி கிடைக்கும். அதனை போல, 211 நாட்கள் – ஓராண்டு வரை உள்ள டெபாசிட்டுக்கு 6.25%, ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரையான டெபாசிட்டுக்கு 6.8% இறுதியாக 2 – 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுக்கு 7% வரை இனி வட்டி கிடைக்கும்.

கடந்த 2023ம் ஆண்டை காட்டிலும் வட்டி விகிதம் கனிசமாக உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம் மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மூத்த குடிமக்களுக்கான வைப்புத் தொகையில் இனி 0.5 சதவிகிதம் வட்டி விகிதம் கூடுதலாக கிடைக்கும். இதனால் SBI வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Trending News

Latest News

You May Like