1. Home
  2. தமிழ்நாடு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிம்மதியான செய்தி : யாரையும் கட்டாயப்படுத்த கூடாது..!

Q

அனைத்து மாவட்ட உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உணவுத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில்,ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக்கூடாது.

ரேஷன் கடைகளில் விற்பனை முடிந்ததும் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்யும் பணியை மேற்கொள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகளுக்கு எந்த இடையூறு இல்லாமலும், குழப்பமின்றியும் கைரேகை பதிவு செய்யுமாறும் கூறப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைத்தாரர்கள் தங்களது வசதியின் படி ரேஷன் கடைக்கு வருகை தந்து கைரேகை பதிவுச் செய்யலாம். கட்டாயப்படுத்தி நியாய விலைக்கடைக்கு வரவழைத்து சிரமங்களை ஏற்படுத்தக் கூடாது.

ரேஷன் அட்டை உறுப்பினர்கள் கைரேகை பதியவில்லை என்றால் பெயர் நீக்கம் செய்யப்படும் என்பது தவறானது. குடும்ப அட்டைத்தாரர்கள் கைவிரல் ரேகை வைக்கும் போது, ஆவணங்கள் எதுவும் கோரக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டை பயனர்களுக்கு அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Trending News

Latest News

You May Like