1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி ரேஷன் கடையில் கருவிழி பதிவு மூலம் பொருட்கள்..!

1

ரேஷன் விநியோகிப்பதில் பல்வேறு முறைகளை அரசு கையாண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் பயோமெட்ரிக் முறையாகும். ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் நேரில் வந்து தங்களது கைரேகையை பதிவு செய்து பொருள்களை வாங்கும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது.

ஆனால் சில சமயங்களில் ஏற்படும் பயோமெட்ரிக் இயந்திர கோளாறு காரணமாக பொருட்கள் விநியோம் செய்வதில் சிக்கலை ஏற்பட்டு வரும் காரணத்தால், மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கருவிழி பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் திருவல்லிக்கேணி ரேஷன் கடைகளில் முதல் முறையாக கருவிழி அடையாள முறை மூலம் பொருள்கள் விநியோகம் தொடங்கப்பட்டது.

Ration-Shop

இந்நிலையில் 2 மாதத்தில் தமிழ்நாட்டில் 36,000 ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் அடையாளம் காணும் ஐ ரைஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளது என உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொட்டலங்கள் மூலம் உணவு பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 4 லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை சேமிக்க ரூ.400 கோடி நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like