1. Home
  2. தமிழ்நாடு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..! உங்களுக்கு நல்ல செய்தி வீடு தேடி வரும்..!

1

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 16-ந் தேதி வெளியிட்டது. அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது,

தேர்தல் நடந்த மாநிலங்களில் எல்லாம் தீவிரமாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றுடன் திரும்பப் பெறப்பட்டன. இனி பணம், பொருட்கள் கொண்டு செல்வதில் எந்தவித கட்டுப்பாடும் இருக்காது. அதேபோல் அரசு புதிய திட்டங்கள் அறிவிக்கவும், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவும் எந்த பிரச்சனையும் இல்லை. இதேபோல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கவும், புதிய குடும்ப அட்டை தரவும் இனி எந்த கட்டுப்பாடும் இல்லை.

சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு கடந்த ஒரு வருடத்தில் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெறப்பட்டதால் இன்று முதல் விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் பொதுமக்கள் குடும்ப அட்டைகள் பெற https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் நேரடியாக இனி விண்ணப்பம் செய்யலாம். அல்லது இசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் நகல் ஸ்மார்ட் கார்டு, கார்டில் புதிய உறுப்பினர்களை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்ப தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்கம் போன்ற அத்தனை சேவைகளையும் மேற்கொள்ளலாம்.

மிக முக்கியமான மகளிர் உரிமை தொகை வாங்க வேண்டுமானால், அவர்கள் கண்டிப்பாக குடும்ப அட்டை வாங்கவேண்டும் . இதேபோல் திருமண உதவி தொகை திட்டம் மற்றும் கர்ப்பிணி உதவி தொகை திட்டத்தின் பலனை பெறவும் குடும்ப அட்டை மிக அத்தியாவசியமானது.இந்நிலையில் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமை தொகை வழங்கப்படுவதால், புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு வழக்கத்தைவிட மிக அதிகமானது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like