ரேஷன் அட்டைதாரர்களே குட் நியூஸ்..! இன்று நடக்கும் முகாம்களை மிஸ் பண்ணிடாதீங்க..!
பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைகேட்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நவம்பர் மாதத்துக்கான குறைகேட்பு முகாம் வரும் 9ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் மாற்றம் மற்றும் குடும்பத்தலைவர் புகைப்படம் மாற்றம் தொடர்பாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டில் முகவரி மாற்றுவது, ரேஷன் கார்டில் குழந்தைகளின் பெயர் சேர்ப்பது, ரேஷன் கார்டில் செல்போன் எண்களை பதிவு செய்வது, ரேஷன் கார்டில் திருமணமான மகன் அல்லது மகள்களின் பெயரை நீக்குவது, புதிதாக திருமணம் ஆனவர்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது போன்ற பணிகளை செய்ய வேண்டும் என்றால் எளிதான காரியமாக இருப்பது இல்லை.
நேரில் சென்று விண்ணப்பித்தாலும், ஆன்லைனில் விண்ணப்பித்தாலும் சில நாட்கள் அலைய வேண்டிய நிலையும் இருக்கும். இந்த சூழலில் அதிகாரிகள் அனைவரும் மக்களை தேடி செல்லும் வகையில் முகாம்கள் ஒவ்வொரு மாதமும் நடப்பது வழக்கம். அந்த முகாம்களில் சென்றுவிண்ணப்பிங்களை தந்தால் உடனடி தீர்வு கிடைக்கிறது அந்த வகையில் பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் இன்று ( நவம்பர் 9ம் தேதி ) தமிழ்நாடு முழுவதும் நடக்க உள்ளது.
ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது வினியோக திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், ரேஷன் கடைகளில் பொருள் பெற நேரில் வரமுடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும். பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.