1. Home
  2. தமிழ்நாடு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..! ஜூன் மாதத்துக்கான பாமாயில், பருப்பு வாங்க இன்னொரு வாய்ப்பு..!

1

தமிழ்நாட்டில் விலைவாசியைக் கட்டுப்படுத்தி, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்கவும், ஊட்டச்சத்துடன் கூடிய உறுதிப்படுத்திடும் நோக்கிலும் அன்றைய முதல்வர் கருணாநிதியால் 2007 ஆம் ஆண்டு முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் வழங்கும் திட்டம் நாட்டிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.

தேர்தல் நடைமுறையின் காரணமாக மே 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஜூன் மாதத்தில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனினும், பற்றாக்குறை காரணமாக பலர் பாமாயில், துவரம் பருப்பை பெற முடியவில்லை.

ஜூலை மாத முதல் வாரத்துக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே மற்றும் ஜூன் மாதத்துக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகிக்கப்பட்டுவிடும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை பெற இயலாத ரேஷன் அட்டைதாரர்கள் ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து மாதம் முழுவதும் பெற்றுக் கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

Trending News

Latest News

You May Like