1. Home
  2. தமிழ்நாடு

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு GOOD NEWS! ஒரு வருடத்திற்கு இலவசப் பயணமா?

1

கோடைக் கால விடுமுறைக்காக அரசு பேருந்துகளில் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் ஜூன் 15ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளில், 75 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதன்படி முதல் பரிசு வெல்லும் 25 பேர் ஜூலை 1 முதல் 2026ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை அனைத்துவகை அரசு பேருந்துகளிலும் ஓராண்டிற்கு 20 முறை இலவசமாகப் பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ஆம் பரிசாக 25 பேருக்கு ஜூலை 1 முதல் 2026ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை அனைத்துவகை அரசு பேருந்துகளிலும் ஓராண்டிற்கு 10 முறை இலவசமாகப் பயணம் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

3வது பரிசு வெல்லும் 25 பேர் ஜூலை 1 முதல் 2026ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை அனைத்துவகை அரசு பேருந்துகளிலும் ஓராண்டிற்கு 5 முறை இலவசமாகப் பயணம் செய்யலாம் எனப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like