1. Home
  2. தமிழ்நாடு

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..! இனி நெடுஞ்சாலையில் சேதம் ஏற்பட்டால் அதுவே சரி செய்து கொள்ளும்..!

1

இந்தியா பொறுத்தவரையில் சாலை மார்க்கமான போக்குவரத்து மிகவும் முக்கியமானதாகவும் அதிக மக்கள் பயன்படுத்தும் அம்சமாகவும் இருந்து வருகிறது. உலகிலேயே இரண்டாவது நீளமான சாலை இணைப்புகளை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இதில் முதலிடத்தில் அமெரிக்கா இருக்கிறது.

இந்த தார்ச்சாலைகள் அனைத்தையும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் என்கிற ஆணையம் செயல்படுத்தி வருகிறது கடந்த 1988ல் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையமானது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆணையமாகவும் இருக்கிறது.

இந்தியாவில் எக்கச்சக்கமான நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. இவை பல வித காரணங்களால் சேதமடைகின்றது. இந்த சேதத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், விபத்துகளும் நடக்கின்றது. இப்படி சாலை சேதத்தினால் ஏற்பட்ட விபத்துகளில் எண்ணற்ற உயிரும் பறிபோயிருக்கிறது.நெடுஞ்சாலைகளில் ஏற்படும் பழுதை சரிசெய்து சாலையை சீரமைப்பது நெடுஞ்சாலை துறைக்கு மிகப்பெரிய வேலையாக இருக்கிறது. சிறிய பள்ளம் என்றாலும் அதனை சரிசெய்ய அதிக நேரமும் அதிக ஆட்களும் தேவைப்படுகிறது. இதற்கு மாற்றுவழியை யோசித்து வருகிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். அந்த வகையில் தானாகவே சீர் செய்துக்கொள்ளும் வகையில் சாலையை அமைப்பது தொடர்பான ஆய்வினை தற்போதும் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் சாதாரண தார் பயன்படுத்தி சாலையை அமைப்பதற்கு பதிலாக ஆஸ்பால்ட் எனப்படும் பொருளைப் பயன்படுத்தி சாலையை அமைத்தால், சாலை அதில் ஏற்படும் சேதத்தை அதுவே சரி செய்து கொள்ளும் என கூறப்படுகிறது. மற்றும் பிட்மேன் எனப்படும் தார் கலந்த சரகற்கள் கலவையை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 இந்த அஸ்பால்ட் விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சாதாரண தார்ச்சாலைகளைவிட அதிக உறுதியுடன் இந்த அஸ்பால்ட் இருக்கும்.. தார்ச்சாலைகளுக்கான செலவைவிட இந்த ஆஸ்பால்ட் சாலைக்கான செலவு அதிகம் என கூறியிருக்கிறார்கள்.

Trending News

Latest News

You May Like