மெட்ரோ பயணிகளுக்கு குட் நியூஸ்..! இனி நாள் முழுவதும் டிராவல் பண்ண 100 ரூபாய் போதும்..!

சென்னையின் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மிக விரைவில் ஒரு இடத்திற்கு பயணிக்க மெட்ரோ ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மேலும் மெட்ரோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்குக் காரணம் பயணிகளுக்கு நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பான பயணி வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் அளித்து வருவது.
2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை எட்டு ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2023 ஆம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மெட்ரோ நிர்வாகமும் அவ்வப்போது புதிய அறிவிப்புகள் அல்லது சலுகைகள் என பயனர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, ஒரு நாள் சுற்றுலா அட்டை வழங்கப்படும் என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.வார இறுதி நாட்களைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த சலுகையில் நூறு 100 ரூபாய் சுற்றுலா அட்டை பெற்று நாள் முழுவதும் மெட்ரோ ரயிலில் அளவற்ற பயணங்களை மேற்கொள்ள முடியும். மெட்ரோவில் எங்கு வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணங்களை மேற்கொள்ளலாம். இதற்கு பயணிகள் 150 ரூபாய் செலுத்தி 100 ரூபாய் சுற்றுலா அட்டை பெற வேண்டும் எனவும், பயணம் முடித்து அட்டையை திருப்பிக் கொடுத்தவுடன் ரூபாய் 50 வைப்பு தொகை திருப்பி தரப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
Unlock the #weekend with Chennai Metro tourist card - hop on, explore, and enjoy the city vibes hassle-free!#chennaimetro #cmrl #metrorail #chennai #tourists #summerbreak #traintravel pic.twitter.com/m2nIizbLpK
— Chennai Metro Rail (@cmrlofficial) May 18, 2024