நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்..! குறைந்தது தங்கம் விலை..!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், பிப்.11-ஆம் தேதி வரலாற்றில் மீண்டும் சவரனுக்கு ரூ.64,000 என்ற விலையைத் தாண்டியது.
ஆனால், அதற்கடுத்த நாட்களில் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் சவரனுக்கு ரூ.64,000 என்ற விலையை கடந்துள்ளது.
திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.400-ம், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.240-ம் நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.520-ம் நேற்று சவரனுக்கு ரூ.280-ம் உயர்ந்தது. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64,560-க்கு விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,025-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,200-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
20-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,560
19-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,280
18-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,760
17-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
16-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120