நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி..!
தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 750-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.15-ம், சவரனுக்கு ரூ.120-ம் உயர்ந்து இருந்தது. பின்னர் மாலை நேரத்திலும் விலையில் மாற்றம் இருந்தது. கூடுதலாக கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது.
அந்தவகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 855-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,805-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.70,440-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை.ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
13-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,840
12-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,000
11-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360
10-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360
09-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120