1. Home
  2. தமிழ்நாடு

முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்..! ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் இனி அதிக வட்டி கிடைக்கும்!

1

அனைவரும் தனது வருமானத்தில் சிறு பகுதியை தங்களது வருங்கால தேவைக்காக சேமித்து வைப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள். இதில் பெரும்பாலான நபர்கள் பணத்தை சேமிக்க ஃபிக்சட் டெபாசிட் தான் சிறந்த வழி என கருதி அதனை தேர்வு செய்கிறார்கள். ஃபிக்சட் டெபாசிட்டில் செலுத்தப்படும் முதலீட்டு தொகைக்கு மாதந்தோறும் வங்கிகள் வட்டி செலுத்துகின்றன. இதன் மூலம் பயனர்களின் சேமிப்பு தொகை பெருகிக் கொண்டே இருக்கும். இத்தகைய ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதத்தை வங்கிகள் தற்போது உயர்த்தி கொண்டு வருகிறது.

நிறையப் பேர் ஃபிக்சட் டெபாசிட் (FD) திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கான வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஹெஃச்டிஎஃப்சி பேங்க் தனது வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. எனவே நீங்கள் HDFC வங்கியின் வாடிக்கையாளராக இருந்தாலோ அல்லது இந்த வங்கியில் முதலீடு செய்ய நினைத்தாலோ உங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. இனி வாடிக்கையாளர்கள் FD மீது அதிக வட்டி விகிதங்களின் பலனைப் பெற முடியும்.

ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு இனி அதிக வட்டி விகிதங்களின் பலனைப் பெறலாம். FD மீதான வட்டி 7.75 சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு வெவ்வேறு விகிதங்களில் வட்டி நடைமுறையில் இருக்கிறது.

ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் ரூ. 2 கோடிக்கும் குறைவான FD திட்டங்களில் அதிக வட்டி விகிதங்களின் பலனைப் பெறுகின்றனர். இவ்வங்கி தனது FD விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்துள்ளது. 8 மாதங்கள் முதல் 20 மாதங்கள் வரையிலான தவணைக் காலங்களில் வாடிக்கையாளர்கள் அதிக வட்டி விகிதத்தின் பலனைப் பெறுவார்கள். பொது முதலீட்டாளர்கள் FD மீது 7.25 சதவீத வட்டி விகிதத்தின் பலனைப் பெறலாம். அதேசமயம், மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும்.

5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான திட்டத்தில் முதலீடு செய்தால் 7.75 சதவீதம் வரை வட்டி லாபம் கிடைக்கும். இருப்பினும், மூத்த குடிமக்கள் இந்த சதவீத வட்டி விகிதத்தின் பலனைப் பெறுவார்கள். அதேசமயம், பொது முதலீட்டாளர்களுக்கு 7 சதவீத வட்டி மட்டுமே கிடைக்கும்.

7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 3.5 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். அதேபோல, 18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான காலவரையறை கொண்ட FD திட்டங்களுக்கு 7 முதல் 7.25 சதவீத வட்டி வருமானம் கிடைக்கும்.

7 முதல் 14 நாட்கள் = 3.00%
15 முதல் 29 நாட்கள் = 3.00%
30 முதல் 45 நாட்கள் = 3.50%
46 முதல் 60 நாட்கள் = 4.50%
61 முதல் 89 நாட்கள் = 4.50%
90 நாட்கள் முதல் 6 மாதங்கள் = 4.50%
6 மாதங்கள் 1 நாட்கள் முதல் 9 மாதங்கள் = 5.75%
9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடம் வரை = 6.00%
1 வருடம் முதல் 15 மாதங்கள் வரை = 6.60%
15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை = 7.10%
18 மாதங்கள் முதல் 21 மாதங்கள் வரை = 7.25%
21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் = 7.00%
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 2 ஆண்டு 11 மாதங்கள் = 7.00%
2 ஆண்டுகள் 11 மாதங்கள் முதல் 35 மாதங்கள் = 7.15%
2 ஆண்டுகள் 11 மாதங்கள் 1 நாள் முதல் 3 வருடம் = 7.00%
3 ஆண்டுகள் 1 நாள் முதல் 4 ஆண்டுகள் 7 மாதங்கள் = 7.00%
4 ஆண்டு 7 மாதங்கள் முதல் 55 மாதங்கள் = 7.20%
4 ஆண்டு 7 மாதங்கள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் = 7.00%
5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் = 7.00%

Trending News

Latest News

You May Like