1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..! தமிழகத்தில் மானிய விலையில் பருப்பு விற்பனை..!

1

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், அதனால் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் மத்திய அரசின் நுகர்வோர் விவகாரம், உணவு பொது விநியோக துறையின் இந்திய தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு லிமிட்டெட், மூலம் மானிய விலையில் பருப்பு வகைகளை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து வெளியான செய்தி குறிப்பில், மானிய விலையில் பருப்பு வகைகளை மத்திய அரசின் என்சிசிஎப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதன் பெயர் “பாரத் டால்” என்பதாகும். இந்த தயாரிப்புகளை தமிழகத்தில் விநியோகம் செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது. மாவட்டந்தோறும் நகரங்கள், கிராமங்களில் உள்ள முக்கிய இடங்களில் 50 நடமாடும் வேன்கள் மூலம் இந்த கடலை பருப்பு விற்பனை செய்யப்படுகின்றன. இதன் எண்ணிக்கை விரைவில் 100ஆக உயர்த்தப்படும். அதே போல கோதுமை, அரிசி, பாசிப்பருப்பு போன்ற புதிய வகைகளும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அதன் தமிழக விநியோகஸ்தரான ஆசான் குளோபல் டிரேட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மானிய விலையில் பருப்பு வகைகளை மத்திய அரசின் என்சிசிஎஃப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.‘பாரத் டால்’ என்ற வணிகப் பெயரில் அந்தத் தயாரிப்புகள் தமிழகத்தில் விநியோகம் செய்வதற்காக எங்களை அந்த நிறுவனம் நியமித்துள்ளது.தற்போது மாவட்டந்தோறும் நகரங்கள், கிராமங்களில் உள்ள முக்கிய இடங்களில் 50 நடமாடும் வேன்கள் மூலம் ‘பாரத் டால்’ கடலைப் பருப்பை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த எண்ணிக்கை விரைவில் 100-ஆக உயா்த்தப்படும். கோதுமை, அரிசி, பாசிப் பருப்பு போன்ற புதிய ரகங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like