இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..! இன்று தங்கம் விலை குறைந்தது..;
தங்கம் விலை இந்த ஆண்டு ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. கடந்த 7 மாதங்களில் மட்டுமே தங்கம் விலை சவரனுக்கு 17 ஆயிரத்துக்கும் மேல் விலை உயர்ந்துள்ளது.
இந்த வாரத்தின் முதல் நாளான ஜூலை 28 ஆம் தேதி ஆபரண தங்கத்தின் விலை மாற்றமின்றி நீடித்தது. நேற்று (ஜூலை 29) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,150க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.73,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று (ஜூலை 30) தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 480 உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரண தங்கம் இன்று ரூ.73,680க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை நேற்று 60 ரூபாய் அதிகரித்து ரூபாய் 9,210க்கு விற்பனை ஆனது.
.தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று தலைகீழாக குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு *320 குறைந்து ₹73,360-க்கும், கிராமுக்கு ₹40 குறைந்து ₹9,170-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாள்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக நகைக் கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.