1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

Q

தங்கம் விலை, கடந்த செவ்வாயன்று ஒரே நாளில் இரண்டு முறை அதிரடியாக உயர்ந்தது. அன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,600 உயர்ந்து ரூ.72,800-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.9,100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.73,400-க்கும், கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,130-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ஒரு சவரன் ரூ.72,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.9,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like