1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..! சமையல் எண்ணெய் விலை குறைய போகிறது..!

1

நாட்டின் சமையல் எண்ணெய் தேவை தற்போது 50 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
 

மலேஷியா, இந்தோனேஷியாவில் இருந்து பாமாயிலும்; பிரேசில், அர்ஜென்டினாவில் இருந்து சோயாபீன் எண்ணெயும்; உக்ரைன், ரஷ்யாவில் இருந்து சூரியகாந்தி எண்ணெயும் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
 

கடந்த 2023 - -24 எண்ணெய் சந்தைப்படுத்தல் ஆண்டில், 1.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 159.60 லட்சம் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், கச்சா சமையல் எண்ணெய்க்கான அடிப்படை சுங்க வரியை குறைத்து நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது.

மத்திய உணவுத்துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா வெளியிட்ட அறிவிப்பில், கச்சா சமையல் எண்ணெய்க்கான அடிப்படை சுங்க வரி, 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படுவதாக உறுதிப்படுத்தி உள்ளார்.

மத்திய அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள எஸ்.இ.ஏ., எனும் சால்வென்ட் எக்ஸ்டிராக்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் செயல் இயக்குநர் பி.வி.மேக்தா தெரிவித்ததாவது:
 

இறக்குமதி வரியானது, அடிப்படை சுங்க வரி, கூடுதல் கட்டணம் ஆகியவை சேர்த்து மூன்று கச்சா சமையல் எண்ணெய்க்கும், 27.50 சதவீதத்தில் இருந்து 16.50 சதவீதமாக குறைந்துள்ளது.
 

அதே சமயம், சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதி வரி மாற்றமின்றி 35.75 சதவீதமாக தொடர்கிறது.
 

கச்சா சமையல் எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதி வரிக்கு இடையே வித்தியாசம் அதிகரித்து உள்ளதால், இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு திறன் அதிகரிப்பதோடு, உள்நாட்டில் சமையல் எண்ணெய் சில்லரை விலையை குறைக்க உதவும்.
 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like