இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..! ஆவின் நெய் விலை அதிரடி குறைப்பு..!
தமிழ்நாடு கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் தேவையை அறிந்து, நெய், வெண்ணெய், தயிர் உள்ளிட்ட ஏராளமான பால் பொருட்களை ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றன. மேலும், பால் உபபொருட்களின் விலையிலும் மக்கள் விரும்பும் வகையில், மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் அதிகம் பயன்படுத்தும், ஆவின் நெய் தள்ளுபடி விலையில் வழங்கப்படவுள்ளது. அதன்படி,ஆவின் நெய் லிட்டர் ஒன்றிற்கு 50 ரூபாய் தள்ளுபடி செய்து விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் அனைவரும் இந்த அதிரடி தள்ளுபடி விலையில் ஆவின் நெய்யினை பெற்று பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 லிட்டர் ஆவின் நெய் 700-க்கு பதில் ரூபாய் 650க்கு விற்பனை..அதே போல் 1/2 லிட்டர் ஆவின் நெய் விலை 365க்கு பதில் 340க்கு விற்கப்படுகிறது.
இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலானது
விழாக்கால சிறப்பு தள்ளுபடி… சலுகை விலையில் ஆவின் நெய்…#Aavin #aavinghee #festiveoffer #aavintn #dipr @TNDIPRNEWS #aavinproducts #diaryproducts pic.twitter.com/tNWJwhTL4q
— Aavin TN (@AavinTN) December 2, 2023
விழாக்கால சிறப்பு தள்ளுபடி… சலுகை விலையில் ஆவின் நெய்…#Aavin #aavinghee #festiveoffer #aavintn #dipr @TNDIPRNEWS #aavinproducts #diaryproducts pic.twitter.com/tNWJwhTL4q
— Aavin TN (@AavinTN) December 2, 2023