அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி: ஆகஸ்ட் 1 முதல் சம்பள உயர்வு..!

கர்நாடக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் சுதாகர் ராவ் தலைமையிலான குழுவினர் 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்துவது குறித்து கர்நாடக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். அதில் அடிப்படை சம்பளத்தில் இருந்து 27.5 சதவீதம் அளவிற்கு உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில் மாநில அரசு தற்போது 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதன்காரணமாக மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.17,440.15 கோடி கூடுதல் செலவாகும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்களுக்கு நற்செய்தி அளிக்கும் வகையில், 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது