அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு

கடந்த ஜனவரி முதல் அகவிலைப்படி 46 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடு ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி உதவி தொகைககளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து ஓய்வூதியம், இறப்பு கிராஜூவிட்டி, பயணப்படி ஆகியவை 25 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டு வாடகை படி அதிகபட்சமாக எக்ஸ் வகை நகரங்களுக்கு 30 சதவிதமும், ஒய் மற்றும் இசட் வகை நகரங்களுக்கு முறையே 20 மற்றும் 10 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு எக்ஸ், ஒய் மற்றும் இசட் பிரிவு நகரங்களில் வசித்தோருக்கு முறையே 27, 18, 9 ஆகிய விழுக்காடு அளவுக்கு வீட்டு வாடைகைப்படி இருந்தது. குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் சீருடை படி ஆகியவையும் 25 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக நிதித்துறை செயலாளர் சிவக்குமார் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.