தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து புதிய உச்சத்தில் விற்கப்படுவதால் தங்கம் எட்டாக்கனியாகி விடுமோ என்று மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
திருமணம், சுப நிகழ்ச்சிக்காக தங்கம் வாங்க நினைப்பவர்களும் செய்வதறியாது தவிக்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை (மே 10) ஒரு கிராம் தங்கம் ரூ.9045க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.72,360க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று (மே12) 22 காரட் தங்கம் கிராமுக்கு அதிரடியாக ரூ.165 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8880க்கும், சவரனுக்கு ரூ. 1320 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.71,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.109க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.