விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. மத்திய, மாநில அரசுகள் கொடுக்கும் இழப்பீடு!
கர்நாடகா விவசாயிகளின் மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்படாமல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு குவிண்டால் 12,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட மாம்பழங்கள் தற்போது வெறும் 3,000 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஆந்திர மாநில அரசு தோடாபுரி மாம்பழங்களின் இறக்குமதிக்கு தடை செய்தது தான். அங்குள்ள விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியிருந்தார். மேலும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கும் தடையை விலக்கக் கோரி கடிதம் எழுதினார். இந்த விவகாரத்தில் கர்நாடகா மாநில விவசாயிகள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆலோசனை
முதலில் கர்நாடக மாநில விவசாயத்துறை அமைச்சரிடம் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு 2.5 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்களின் கொள்முதல் விலையில் ஏற்பட்ட இறக்கத்தை ஈடுசெய்யும் வகையில் இழப்பீடு தருவதாக அறிவித்தார். இதனை மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கவுள்ளன. இந்த அறிவிப்பு PDPS திட்டத்தின் கீழ் வழங்கப்படுவது கவனிக்கத்தக்கது
.
.png)