பக்தர்களுக்கு தித்திப்பான செய்தி... இனி திருப்பதியில் அன்லிமிடெட் லட்டு கிடைக்கும்..!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்களுக்கு இலவச தரிசனம், ரூ.300 டிக்கெட், சர்வ தரிசனம் , வி.ஐ.பி தரிசனம் என எந்த டிக்கெட்டுகளில் சுவாமி தரிசனம் செய்தாலும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.இது தவிர, லட்டு விற்பனைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால், கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள் கவுன்டர்களில் ஒரு லட்டுக்கு ரூ.50 எனக் கட்டணம் செலுத்தி கூடுதலாகப் பெற்றுவந்தனர்.இதுவும் ஒரு ஆளுக்கு இத்தனை எக்ஸ்ட்ரா லட்டு என கட்டுப்பாடு உள்ளது.
இந்த நிலையில் திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான நிர்வாகி சியாமளா ராவ், சாமி கும்பிட்ட தரிசன டிக்கெட்டுடன் லட்டு கவுன்ட்டருக்கு வரும் பக்தர்களுக்கு தலா ரூ 50 விலையில் அன்லிமிட்டெட்டாக எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வழங்கப்படும். இது இன்று (செப்டம்பர் 2) அமலுக்கு வருகிறது என்றார்.
சாமி தரிசனம் செய்யாதவர்களுக்கு ஆதார் அட்டை அடிப்படையில் 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.