1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்..! இனி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து..!

1

பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானாவில் தேர்தல் முடிந்துள்ளதால் திருமலைக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர். இதனையொட்டி திருப்பதி தேவஸ்தானமும் தினமும் 20 ஆயிரம் பேருக்கு ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன்களை ஆன்லைனில் விற்பனை செய்ததுடன் தினமும் 20 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளையும் வழங்கி வந்தது.

இதனிடையே திருமலையில் உள்ள வைகுண்டம் காம்பளக்சில் உள்ள 31 அறைகள் முழுவதும் பக்தர்களால் நிரம்பியுள்ளது. இதனால் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.தேவஸ்தான நிர்வாகம் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளை செய்து கொடுத்து வருகிறது.

1

வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் தங்க இடம் கிடைக்காத பக்தர்கள், சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நிற்கும் நிலை உள்ளது.

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஜுன் 30ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  எந்தவித பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like