1. Home
  2. தமிழ்நாடு

பக்தர்களுக்கு நற்செய்தி.. ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு..!

பக்தர்களுக்கு நற்செய்தி.. ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை உள்ளது.

அதில் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான ஒதுக்கீடாக தரிசன டிக்கெட்டுகள் இன்று (24-ம் தேதி) காலை 9 மணியளவில் திருமலை - திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

அதேபோல் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான ஒதுக்கீடாக சுப்ரபாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவை டிக்கெட்டுகள் இன்று (24-ம் தேதி) மாலை 3 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

இதற்கு, 26-ம் தேதி மாலை 3 மணிக்குள் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். 26-ம் தேதி மாலை 6 மணியளவில் ஆன்லைனில் குலுக்கல் நடக்கும். அதில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பக்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். பக்தர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை பெறலாம்.

மேலும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை (உற்சவம்) டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

அதற்கான முன்பதிவு நாளை (25-ம் தேதி) காலை 9 மணி அளவில் தொடங்குகிறது என திருமலை - திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like