குட் நியூஸ் சொன்ன கனரா வங்கி.. இனி மினிமம் பேலன்ஸ் தேவையில்லை!

கனரா வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியை கூறியுள்ளது. ஜூன் 1 முதல் கனரா வங்கி அதன் அனைத்து சேமிப்பு வங்கிக் கணக்குகளிலும் சராசரி மாதாந்திர இருப்பு (AMB) தேவையைத் தள்ளுபடி செய்துள்ளது.
கனரா வங்கி மினிமம் பேலன்ஸ் முக்கிய அம்சங்கள்!
1. புதிய விதி: இந்த புதிய விதி ஜூன் 1 அதாவது இன்று முதல் அமலுக்கு வரும். கனரா வங்கியின் அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் சாதாரண சேமிப்பு கணக்குகள், ஊதிய கணக்குகள் மற்றும் NRI சேமிப்பு கணக்குகள் அடங்கும் .
2. இதற்கு முன்பு, நகர மற்றும் மெட்ரோ கிளைகளில் ரூ.2,000, அரைநகர கிளைகளில் ரூ.1,000 மற்றும் கிராம கிளைகளில் ரூ.500 என்ற குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டியிருந்தது. இந்தத் தொகையை பராமரிக்காததற்கான அபராதம் ரூ.25 முதல் ரூ.45 வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.
3. இந்த மாற்றம் ஊதியதாரர்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், NRI-க்கள் மற்றும் புதிய வங்கி பயனாளிகள் உள்ளிட்ட பலருக்கு நன்மை தரும். கனரா வங்கி இந்த முடிவை வாடிக்கையாளர் நலனை முன்னிட்டு எடுத்துள்ளது. இது வங்கி சேவைகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் .
4. இந்த மாற்றம் வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மை தரும் வகையில் அமைந்துள்ளது. மேலும், வங்கியின் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் மற்றும் சேவை கட்டணங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி தெரிந்து கொள்ள, வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.