1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ் மக்களே.. சரசரவென சரிந்த தங்கம் விலை..!

Q

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொது மக்கள், முதலீட்டாளர்கள், தொழில் துறையினர் என பல்வேறு தரப்பினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தங்கத்தின் விலை ஒரு நாள் கூட இடைவெளி விடாமல் உயர்ந்து வருகிறது. இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 920 ரூபாய் அதிகரித்துள்ளது. 

நேற்று தங்கம் கிராம் ஒன்றுக்கு விலை 80 ரூபாய் அதிகரித்து 8,060 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 64,480க்கு ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே ஒரு கிராம் தங்கம் 8 ஆயிரம் ரூபாயை தாண்டியிருப்பது நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்தது.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது நீண்ட நாட்களுக்கு பிறகு சரசரவென சரிந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 120 ரூபாய் குறைந்து 7940 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து 63ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்திருப்பது நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ. 6,550க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.52,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.107-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like