1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்.. கோவை வழியாக கொல்லத்திற்கு கூடுதல் ரயில்..!

குட் நியூஸ்.. கோவை வழியாக கொல்லத்திற்கு கூடுதல் ரயில்..!


சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக வருகிற 18-ம் தேதி முதல், கோவை வழியாக கொல்லத்திற்கு கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‘சபரிமலை சீசனையொட்டி, பக்தர்களின் வசதிக்காக சேலம், கோவை வழித்தடத்தில் வருகிற 18-ந் தேதி முதல் மேலும், கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
ஐயப்ப பக்தர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய மூன்று தத்துவங்கள்!- Dinamani
இதன்படி, வருகிற 18-ம் தேதி காலை 5.40 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07133) மறுநாள் மதியம் 1.50 மணிக்கு கொல்லம் சென்றடையும். கொல்லத்தில் இருந்து 19-ம் தேதி இரவு 7.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07134) 21-ம் தேதி காலை 3.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து 22-ம் தேதி காலை 5.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07135) மறுநாள் மதியம் 1.50 மணிக்கு கொல்லம் சென்றடையும். கொல்லத்தில் இருந்து 23-ம் தேதி இரவு 7.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07136) 25-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு காச்சிகுடா சென்றடையும்.

மகாராஷ்டிரா மாநிலம் நண்டேடுவில் இருந்து 23-ம் தேதி காலை 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07137) மறுநாள் இரவு 7.40 மணிக்கு கொல்லம் சென்றடையும். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 21-ம் தேதி மதியம் 2.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07117) மறுநாள் இரவு 9.40 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

அதேபோல், கொல்லத்தில் இருந்து 23-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:07118) 25-ம் தேதி காலை 8 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும்.

கொல்லத்தில் இருந்து 25-ம் தேதி இரவு 12.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07506), மறுநாள் மாலை 5.10 மணிக்கு திருப்பதியை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்கள், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like