குட் நியூஸ்! தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருக்கிறது! அமைச்சர் விஜயபாஸ்கா் தகவல்!

தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கூட்டத்தொடரில் கொரோனா விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்தது. அதற்கு பதில் அளித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி இந்தியாவிலேயே கொரோனா பரவலில் மிகவும் வெளிப்படையாக, நியாயமாக புள்ளி விவரங்களை தமிழகம் வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் அதிகமான பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை விட அதிக பரிசோதனை மையங்களை உருவாக்கப் பட்டுள்ளன.
கொரோனா உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அனைத்து தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மிகத் தீவிரமாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் நோய்ப் பரவல் தமிழகத்தில் குறையத் தொடங்கியிருக்கிறது. இறப்பு சதவீதம் குறைந்திருக்கிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
newstm.in