1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்.. 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 ஆடுகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

குட் நியூஸ்.. 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 ஆடுகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு..!


ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றுவதற்காக 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு செம்மறி ஆடுகள் / வெள்ளாடுகள் வழங்க 75 கோடியே 63 லட்சம் ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற 38 ஆயிரம் பெண்களுக்கு தலா ஐந்து ஆடுகள் என ஒரு லட்சத்து 94 ஆயிரம் ஆடுகள் வழங்கப்படும். இந்த பயனாளிகளில் குறைந்தது 30 % எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

நிலங்கள் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் எனவும், பயனாளிகள் ஏற்கனவே ஆடுகள், மாடுகள் வைத்திருக்க கூடாது எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிவாய்ந்த பயனாளர்களை தேர்ந்தெடுக்கவும், அதனை முறைப்படி வழங்குவதை கண்காணிக்கவும் கால்நடைத் துறையின் துணை இயக்குனர் தலைமையில் குழு அமைத்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like