1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்! 40% பள்ளிப் பாடத் திட்டம் குறைக்கப்படும்!

குட் நியூஸ்! 40% பள்ளிப் பாடத் திட்டம் குறைக்கப்படும்!


கொரோனா  பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகள், கல்லூரிகளில் இணையதளம் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் மூலமும் மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மற்ற மாநிலங்கள்  பாடத்திட்டங்களை குறைப்பது தொடர்பாக அறிக்கை  வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் பள்ளிக்கல்வி ஆணையா் தலைமையில் 16 பேர் கொண்ட நிபுணா்கள் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இக்குழு இக்கட்டான சூழலில்  கற்பித்தல் பணிகள், பள்ளிகள் திறப்பில் ஏற்பட்டுள்ள தாமதம், பாடத்திட்டம் , நடைமுறை சிக்கல்கள் ஆகியவை குறித்து ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதன்படி பொதுத் தேர்வு  எழுத இருக்கும் 10, 11, 12 மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வரவழைத்து, வகுப்புகள் எடுக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு 30 சதவீதம் பாடத்திட்டத்தை குறைக்கவும்  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  மற்ற வகுப்புகளுக்கு 40 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் எனவும் அதற்கான ஆலோசனை தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இதுகுறித்து அதிகாரப்பூா்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like