1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்! 3 மாசத்துல கொரோனா தடுப்பூசி!

குட் நியூஸ்! 3 மாசத்துல கொரோனா தடுப்பூசி!


சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு தடுப்பு முறைகளைக் கையாண்டு வருகின்றன. பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளன. அந்த வகையில் கொரோனாவிற்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியை ரஷியா கண்டுபிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யாவை அடுத்து இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளும் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்நிலையில் பிரிட்டனில் இந்த வருட இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என பிரிட்டனின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் குழந்தைகளுக்கான தடுப்பூசி இன்னும் 3 மாதங்களிலும், பெரியவர்களுக்கான தடுப்பூசி 6 மாதங்களிலும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like