குட் நியூஸ்..! இனி சைவ உணவு டெலிவரி செய்ய ஜொமோட்டோவின் க்ரீன் டீம் ..!

இந்தியாவில் பிரதான உணவு டெலிவரி நிறுவனமாக இருப்பது ஜோமாடோ (Zomato). வீட்டில் இருந்தபடி தங்களுக்கு தேவையான உணவை செயலின் மூலம் ஆர்டர் செய்யப்படும் பட்சத்தில், வீட்டிற்கு வந்து அது நேரடியாக டெலிவரி செய்யப்படும். அதேபோல, நாம் ஆர்டர் கொடுத்த 30 முதல் 40 நிமிடங்களுக்குள், உணவு கைக்கு வரும் என்பதால் பலரும் இதனை விரும்புகின்றனர்.
இந்நிலையில் சைவ பிரியர்களுக்காக தற்போது "ப்யூர் வெஜ் ஃப்ளீட்" அறிமுகப்படுத்துவதாக Zomato இன்று அறிவித்துள்ளது. Zomato CEO தீபிந்தர் கோயல் இந்தச் செய்தியை அறிவித்தார். சைவ உணவு உண்பவர்களின் உணவு விருப்பங்களை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார், உலகில் சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவே அதிகம் உள்ளது, மேலும் அவர்களிடமிருந்து நாங்கள் பெற்ற முக்கியமான கருத்துகளில் ஒன்று, அவர்கள் தங்கள் உணவை எப்படி சமைக்கிறார்கள், எப்படி உணவைக் கையாளுகிறார்கள் என்பதைப் பற்றி அடிக்கடி கவலை தெரிவிக்கின்றனர்.அவர்களின் உணவுமுறைக்குத் தீர்வு காண்பதற்கு விருப்பத்தேர்வுகள், 100% சைவ உணவு விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்காக Zomatoவில் "Pure Veg Fleet" உடன் "Pure Veg Mode"ஐ இன்று அறிமுகப்படுத்துகிறோம்" என்று Zomato CEO தீபிந்தர் கோயல் அறிவித்தார்.
To solve for their dietary preferences, we are today, launching a “Pure Veg Mode" along with a “Pure Veg Fleet” on Zomato, for customers who have a 100% vegetarian dietary preference. pic.twitter.com/xzV9y9IQbU
— Deepinder Goyal (@deepigoyal) March 19, 2024