1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி வெறும் 90 நிமிஷத்துல திருப்பதி போகலாம்..!

1

திருவள்ளூர் மற்றும் திருப்பதி இடையேயான பயண நேரத்தை குறைக்கும் வகையில் 985 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தொடங்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.இந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டால் திருவள்ளூரில் இருந்து திருப்பதிக்கு வெறும் 90 நிமிடங்களில் சென்றடைய முடியும். 

இந்த நான்கு வழிப்பாதையில் 44 கிலோ மீட்டர் சாலையில் இரண்டு புதிய சுங்கச்சாவடிகள் நிறுவப்படும் என்றும் அங்கு மட்டுமே அணுகு சாலைகள் இருக்கும் என்றும் மற்றப்படி உள்ளூர் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளே வருவதற்கோ அல்லது சாலையில் இருந்து வெளியே செல்வதற்கோ வாய்ப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் தற்போதைய இருவழிச் சாலைகளை நான்கு வழிச்சாலையாக சர்வீஸ் சாலைகளுடன் விரிவுபடுத்தப்பட உள்ளது. உள்ளூர் பயணிகளுக்கு உதவும் வகையில் முக்கிய சந்திப்புகளில் 20 சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending News

Latest News

You May Like