1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி இருக்கும் இடத்தில்‌ இருந்தே புகார் அளிக்கலாம்..!

1

மின்சார வாரியத்தில் ஏதேனும் புகார்கள் இருந்தால், இனி நீங்கள் நேரிலோ அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகாரை தெரிவிக்க வேண்டியதில்லை. இனி நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்த புகார்களை தெரிவிக்கலாம்.

ஒரே சமயத்தில் அதிகம் பேர் புகார் அளிக்க தொடர்பு கொள்ளும்போது, பலருக்கு இணைப்பு கிடைப்பதில்லை. இதனால், புகார் அளிக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.இனி இந்த கவலை உங்களுக்கு இல்லை. 

மின் கட்டணத்தை, எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் செலுத்த, 'TANGEDCO' என்ற மொபைல் போன் செயலியை, மின் வாரியம் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலியில், 'கம்ப்ளையின்ட்' என்ற பகுதி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் மின் தடை, மீட்டர், மின் கட்டணம், மின்னழுத்த பிரச்னைகள் குறித்தும், சேதமடைந்த மின் கம்பம், மின் திருட்டு, தீ விபத்து, மின் கம்பி அறுந்து விழுந்திருப்பது ஆகியவை தொடர்பாகவும் புகார் அளிக்கும் சேவையை, வாரியம் துவக்கியுள்ளது. அந்த செயலியில் மீட்டர், மின் கட்டண புகார்களுக்கு, மின் இணைப்பு எண் பதிவிட வேண்டும். மற்ற சேவைகளுக்கான புகாரை, மின் இணைப்பு எண் குறிப்பிடாமலும் பதிவிடலாம்.

மேலும், மொபைல் போன் கேமராவில் புகைப்படம் எடுத்தும் பதிவிடலாம். புகார் பதிவிடுவது தொடர்பான விபரம், செயலியிலும், கணினியிலும் பதிவாகிறது.

மின்னகத்தின் நுகர்வோர் சேவை மையம் எண்ணான 9498794987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என மின்துறை அறிவித்துள்ளது. செயலியை டவுன்லோட செய்ய இங்கே https://play.google.com /store/apps/details?id=com.tneb.tangedco&pcampaignid=web

Trending News

Latest News

You May Like