1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இலவசமாக கார் ஓட்டி பழகலாம்.. தமிழக அரசு திட்டம்..!

Q

'நான் முதல்வன்’ திட்டம் 2022 இல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அதிக ஊதியம் பெறும் வேலைகள், தொழில்முனைவு மற்றும் திறன் மேம்பாட்டிற்காக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதுவரை, 28.3 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர், 11 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் படிக்கும் இளைஞர்கள், வேலைதேடுபவர்கள் என்று பலருக்கு ஏற்றபடி புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. முக்கியமாக நான் முதல்வன் திட்டம் மக்களிடையே பெரிய அளவில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. மாணவர்கள் பலருக்கு புதிய வாய்ப்புகளை நான் முதல்வன் திட்டம் வழங்கி வருகிறது.
வாகன ஓட்டுனர்களுக்கு உலகளவில் தேவை அதிகரித்து வருவதால், குறிப்பாக ஜப்பான் போன்ற நாடுகளில் வாகன ஓட்டுனர்களுக்கு தேவை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் அதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இப்போது இலவச தொழில்முறை ஓட்டுநர் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளன.
இதன்படி, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவசமாக கார் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது
45-நாள் LMV/HTV மற்றும் 30-நாள் Forklift Operator திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. 8வது, 10வது அல்லது 12வது வகுப்புத் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய முடியும். ரெட் ஹில்ஸ், மறைமலைநகர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் பயிற்சி மையங்கள் உள்ளன. வரும் நாட்களில் மற்ற பகுதிகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கப்படும்.
தகுதியுள்ள பயனாளிகள் அரசின் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இளங்கலை படிப்பை முடித்த 21 வயது முதல் 24 வயது வரையிலான இளைஞர்களுக்கு தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் விதமாக 12 மாத இன்டர்ன்ஷிப் வாய்ப்பையும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக மாதந்தோறும் ரூபாய் 5 ஆயிரம் ஸ்டைபண்ட் எனப்படும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பாலிடெக்னிக், ஐடிஐ, டிப்ளமோ, ஏதேனும் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும். ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
இந்த திட்டங்கள் மற்றும் பிற திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள www.naanmudhalvan.in.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like