குட் நியூஸ்..! பொங்கலுக்கு மிஸ்ஸான வேட்டி சேலை வாங்கிக் கொள்ளலாம்..!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி குடும்பங்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்புடன் கூடிய தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கப்பட்டது.பொங்கல் திருநாளை முன்னிட்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி, சேலை சேர்த்து வழங்கப்பட்டது.1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் எண்ணிக்கையிலான வேட்டிகள் மற்றும் 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் எண்ணிக்கையிலான சேலைகள் நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும் பணி நடைபெற்றது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தின் மூலம் ரூ.249.76 கோடி செலவில் 2 கோடியே 20 லட்சத்து 94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டது.. இருப்பினும், பல லட்சம் பேர் இன்னும் தங்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறவில்லை.
பொங்கல் வேட்டி, சேலைகளை இன்னும் பெறாதவர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில், பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் தற்போது மார்ச் 31 ஆம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயனாளிகள் தங்கள் வேட்டி, சேலைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.