குட் நியூஸ்..! விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை! எப்போது விண்ணப்பிக்கலாம்..?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பயனாளிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
மேலும் புதிதாக திருமணமானவர்கள், புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள், கல்லூரி படிப்பை முடித்தவர்கள் என மாதம் தோறும் ஆயிரக்கணக்கில் மகளிர் உரிமைத்தொகைக்காக புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அரசின் விதிமுறைகள் பொருந்தாததால் தற்போது சுமார் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பயணிகள் உரிமை தொகை திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 15 லட்சத்திலிருந்து ஒரு கோடியே 14 இலட்சமாக குறைந்து இருக்கிறது. அதிக வருமானம், நிலம் வாங்குதல், அரசு பணிகளில் சேர்ந்தவர்கள், உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் பயனாளிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புதிதாக திருமணமானவர்கள், புதியதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், பெயர் நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் மேல் முறையீடு செய்தவர்கள் என மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை விரைவில் புதுப்பிக்கப்பட இருக்கிறது. புதிய பயனர்கள் இணைப்பு தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்தவர்களுக்கு இன்னும் மூன்று மாத காலத்தில் விண்ணப்பம் பெறப்பட்டு தகுதியுடைய அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு இருக்கிறது. அதே நேரத்தில் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டு இருக்கும் நிலையில் சில விதிமுறைகளை மட்டும் கடைபிடிக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது. குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும், ஆண்டு முழுவதும் 3600 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தி இருக்க வேண்டும், சொந்தமாக இரு சக்கர வாகனங்கள் கார் உள்ளிட்டவை வைத்திருக்கக் கூடாது என சில தகுதிகள் சிறப்பு திட்ட செயலாக்கு துறை மூலம் வரையறுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வரையறைகள் மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான விண்ணப்பம் பெறப்பட இருக்கிறது. அந்த வகையில் ஜூன் மாதம் 15 ஆம் தேதிக்குள் புதிய பயனாளிகளின் பெயர் சேர்க்கப்பட்டு ஜூலை மாதம் முதல் அவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும். முன்னதாக மே முதல் வாரத்தில் இருந்து இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு பயனாளிகள் பட்டியல் வெளியிடப்படும் என கூறினர்.