குட் நியூஸ்..! மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 + உதவித்தொகை ரூ.1,500...!

இன்றைய கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்.எல்.ஏ தங்கமணி முக்கியமான கேள்வி ஒன்றை முன்வைத்தார். அதாவது, மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு 1,500 ரூபாய் கொடுக்கிறோம் ஒரு வீட்டிற்கு. ஆனால் அந்த குழந்தைகளை பாதுகாக்கின்ற தாய்மார்கள் கஷ்டப்படுகிறார்கள். ஒரு சில குழந்தைகள் ரொம்ப சத்தம் போட்டு கொண்டிருக்கிறது.
அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு தெரியும். ஆகையால் அவர்களுக்கு அந்த உரிமைத் தொகை மறுக்கப்படுகிறது. 1,500 ரூபாய் வாங்கும் போது ஏதாவது ஒரு கிடைக்கும் போது, இந்த உதவி கிடைக்காது என்று சொல்லி விடுகிறார்கள். ஆகவே அந்த 1,000 ரூபாய் கிடைத்தால் மொத்தம் 2,500 ரூபாயை வைத்து முழுமையாக அந்த குடும்பம் குழந்தையை பாதுகாக்க உதவிகரமாக இருக்கும்.
எனவே அரசு பரிசீலிக்குமா என்பதை பேரவைத் தலைவர் வாயிலாக அமைச்சர் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார். அதற்கு பதிலளித்த மகளிர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கீதா ஜீவன், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற்றாலும் மகளிர் உரிமைத் தொகை பெறலாம் என்று அதற்கு விதிவிலக்கு அளித்துள்ளார்கள்.
ஆகவே மாண்புமிகு உறுப்பினர் தங்கமணி அவர்கள் அந்த விவரத்தை தெரிவித்தீர்கள் என்றால் நிச்சயம் நடவடிக்கை எடுக்க முடியும். மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற்றிருந்தாலும் அந்த குடும்பத்திற்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது தான் நம்முடைய முதலமைச்சர் அளித்த உத்தரவாதம், உத்தரவு என்பதை கூறி கொள்வதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்மாதிரி மாடலாய் மாறியிருக்கிறது. பல்வேறு மாநிலங்களும் தங்கள் நிதி நிலைக்கு ஏற்ப பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி 1.14 கோடி பேர் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் வங்கி கணக்கில் நேரடியாக பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது