1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000.. துணை முதல்வர் கொடுத்த அப்டேட்..!

1

நாகப்பட்டினம் மாவட்டம் அவுரித்திடலில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், விவசாயிகள், மீனவர்கள், தூய்மைப் பணியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 2,400 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து திட்டங்களையும் தமிழக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக பெண் பிரதிநிதிகளை உருவாக்கிய பெருமை முதல்வரையே சாரும். பெண்கள் அதிகளவில் உயர்கல்வி படிக்க தமிழக முதல்வர் கொண்டு வந்த புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளன. முன்னோடி திட்டமான காலை உணவுத் திட்டம் மூலம் 20 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டங்களை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன.

 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் மாதம் தோறும் 1 கோடியே 16 லட்சம் மகளிர் பயன் அடைகின்றனர். விடுபட்டவர்களில் தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தற்போது பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. இதையெல்லாம் பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது. எப்படியாவது திமுக கூட்டணி உடையாதா என்று அவர் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும். திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் 2வது முறையாக முதல்வராவார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கட்சிக் கூட்டத்தில் பேசும்போது, அதிமுகவுடன் கூட்டணி வைக்க பணம் கேட்கிறார்கள் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். அதிமுக கூட்டணிக்கு கூப்பிட்டால் ஒரு கட்சி 200 கோடியும், 20 சீட்டும் கேட்கிறது என பேரம் பற்றி பேசி வருவதாக சொல்கிறார். அந்தக் கட்சியின் நிலை பரிதாபமாக உள்ளது” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Trending News

Latest News

You May Like